MARC காட்சி

Back
திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோயில்
245 : _ _ |a திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோயில் -
246 : _ _ |a திருவலிதாயம்
520 : _ _ |a இக்கோயில் தூங்கானை மாடக் கோயிலாகும். அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர், பாம்பன் சுவாமிகள், ராமலிங்க அடிகள் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். பாடிக்கு திருவலிதாயம், திருவல்லீஸ்வரம் என்ற மற்ற பெயர்களும் உண்டு. வலியன் என்ற கருங்குருவி சிவனை வணங்கி வழிபட்டதால் இந்த இடம் வலிதாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தலத்தில் தான் பிள்ளையாருக்கு திருமணம் நடந்தது. வியாழ பகவானாகிய குரு தன் பாவம் தீர இந்த தலத்திற்கு வந்து சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றார். கோயில் பிற்காலச் சோழ மன்னர்களால் கட்டப்பெற்றதாகும்.
653 : _ _ |a சிவன் கோயில், பாடல் பெற்ற தலங்கள், தேவாரத் தலங்கள், தொண்டை மண்டலக் கோயில்கள், தமிழ்நாட்டு சிவாலயங்கள், திருவள்ளுர், திருவள்ளூர், பாடி, திருவலிதாயம், திருவல்லீசுவரம், திருவல்லீஸ்வரர், ஜெகதாம்பிகை, குரு ஸ்தலம், வலியன், கரிக்குருவி, பரத்வாஜர், குருப்பெயர்ச்சி
700 : _ _ |a திரு.வேலுதரன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம்.
914 : _ _ |a 13.17510265
915 : _ _ |a 80.0709343
918 : _ _ |a ஜெகதாம்பிகை, தாயம்மை
922 : _ _ |a கொன்றை, பாதிரி
923 : _ _ |a பரத்வாஜ் தீர்த்தம்
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a சித்திரையில் பிரம்மோற்சவம், தை கார்த்திகை, ஆண்டு தோறும் குருப் பெயர்ச்சி
927 : _ _ |a ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் புழல் கோட்டத்து அம்பத்தூர் நாட்டுத் திருவல்லிதாயம் என்று இத்தலத்தை இங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் காலத்தால் முந்தியது மூன்றாம் இராஜராஜனின் கல்வெட்டுகளாகும். இக்கோயிலில் சுமார் 15 கல்வெட்டுகள் உள்ளன. அர்த்த மண்டப தெற்குப்புறமுகத்தில் உள்ள மூன்றாம் ராஜராஜன் கல்வெட்டு சேட்திர அருளிவித்ததைத் தெரிவிக்கிறது. மற்றொரு கல்வெட்டு பரத்வாஜி திருவிடையான் திரு ராபீசுரமுடையர்களான திருப்பதியில் விண்ணப்பம் செய்யும் திருச்சிற்றம்பலமுடையான் ஆல்ரயலிங்கமாக எழுந்தருளிவித்த நாயனார் அழகிய திருச்சிற்றம்பலமுடைய நாயனார்க்குப் பூசை அமுது படிக்கு நற்காசு பத்து அளித்துள்ளதைக் கூறுகிறது. மதுராந்தக பொத்தப்பி சோழனுடைய கல்வெட்டில் திருவலிதாயத்து ஊரவர் தங்களூரில் உள்ள இறையிலி தேவதானங்கள் நீக்கி ஊர் முழுவதையும் ஸர்வமான்யமாகக் கொடுத்ததைக் காணமுடிகிறது.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a சதுரவடிவக் கருவறையில் இறைவன் இலிங்க வடிவில் உள்ளார். இறைவி நின்ற நிலையில் காட்சியளிக்கிறாள். இறைவன் கருவறை விமானத்தின் தேவக்கோட்டச் சிற்பங்களாக தென்முகக்கடவுள், கணபதி, துர்க்கை ஆகிய திருவுருவங்கள் சிற்பங்களாக உள்ளன. கருவறைத்திருச்சுற்றில் கணபதி, முருகன் ஆகிய சிற்பங்களும் காணப்படுகின்றன.
930 : _ _ |a இத்தலத்தில் குரு பகவான் தவம் புரிந்து காமத்தீயை வென்றார். திருமால், அனுமன், சுக்ரீவன், இராமபிரான், லவகுசலர் முதலியோர் இறைவனை வழிபட்டு பேறு பெற்றனர். அகத்திய முனிவர் வில்வலன், வாதாபி ஆகியோரை கொன்ற பாவம் நீங்க இத்தலத்தில் பெருமானை வழிபட்டு பேறு பெற்ற தலம். வியாழ பகவானின் மகன்களாக பரத்வாஜர், கரிக்குருவி என்கிற வலியன் பறவையின் மகனாகப் பிறந்தார். பரத்வாஜர் தான் பறவையாக பிறந்ததைக் கண்டு வருத்தம் அடைந்து, பல புண்ணிய தலங்களுக்கு சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்த போது, கொன்றை மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை கண்டார். இலிங்கத்திற்கு பூசை செய்து வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன், சாப விமோசனம் கொடுத்து பறவைகளின் தலைவனாகும்படி அருளினார். எனவே தான், இத்தலம் "திருவலிதாயம்" என்றும் சிவன் "வலியநாதர்" என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மன் தவப்புதல்வியரான கமலை, வள்ளி என்னும் இருவரையும் விநாயகப்பெருமான் இத்தலத்தில் திருமணம் புரிந்து கொண்டதாக புராணம் கூறுகின்றது.
932 : _ _ |a இக்கோயில் கோபுரத்தின் காலம் 16-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். இங்குள்ள கோபுரம் ஐந்து நிலைகளை உடையதாய் உள்ளது. எண்ணற்ற கதை உருவங்கள் கோபுரத்தை அணி செய்கின்றன. கருவறை சதுர வடிவில் அமைந்துள்ளது. அர்த்த மண்டபம் தூண்களுடன் காட்சியளிக்கிறது. இரு திருச்சுற்றுகளை உடையதாய் அமைக்கப்பட்டுள்ளது.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a திருமுல்லைவாயில்
935 : _ _ |a திருவலிதாயம் என்னும் பெயர் கொண்ட இத்தலம் தற்போது பாடி என வழங்கப்படுகிறது. சென்னை – ஆவடி சாலையில் பாடி டிவிஸ் லூகாஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி எதிரே உள்ள கிளைப் பாதையில் சென்று இக்கோயிலை அடையலாம்.
936 : _ _ |a காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8.30 இரவு மணி வரை
937 : _ _ |a பாடி
938 : _ _ |a அம்பத்தூர்
939 : _ _ |a மீனம்பாக்கம்
940 : _ _ |a பூந்தமல்லி வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000325
barcode : TVA_TEM_000325
book category : சைவம்
cover images TVA_TEM_000325/TVA_TEM_000325_திருவலிதாயம்_திருவல்லீசுவரர்-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000325/TVA_TEM_000325_திருவலிதாயம்_திருவல்லீசுவரர்-கோயில்-0001.jpg

TVA_TEM_000325/TVA_TEM_000325_திருவலிதாயம்_திருவல்லீசுவரர்-கோயில்-0002.jpg

TVA_TEM_000325/TVA_TEM_000325_திருவலிதாயம்_திருவல்லீசுவரர்-கோயில்-0003.jpg